நாளை மறுநாள் மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பு... செங்கோட்டையன் அடுத்த அதிரடி!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவரை அதிமுக பொதுசெயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவித்துள்ளார். இந்நிலையில் செங்கோடையன் மறுபடியும் நாளை மறுநாள் செப்டம்பர் 9 ம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் இந்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 5ல், கட்சியில் இருந்து பிரிந்தவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி கே. பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.

எடப்பாடி அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கிய நிலையில், செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு, கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் தலைவர்கள் வி.கே. சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் இணைப்பது தொடர்பானதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.செங்கோட்டையன், “மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில் கட்சியை விட்டு வெளியேறியவர்களை அரவணைக்க வேண்டும். இது தொண்டர்களின் விருப்பம்,” என கூறியிருந்தார். இந்நிலையில், அவரது முக்கிய அறிவிப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியை வலுப்படுத்துவதற்கான புதிய உத்திகளை உள்ளடக்கியிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எடப்பாடியின் முடிவுக்கு எதிராக, செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்து வருகின்றனர். இது கட்சிக்குள் பிளவை ஆழப்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு, அதிமுகவின் உட்கட்சி இயக்கவியலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
