இன்று 2222 பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்!!

 
ஆசிரியர் கலந்தாய்வு

தமிழகத்தில் 2222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகள்  ஜனவரி 7ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் இன்று நவம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்

அதன்படி  தமிழ் - 394, ஆங்கிலம் - 252, கணிதம் - 233, மற்றும் இயற்பியல் - 292 என மொத்தம் 2,222 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை இந்த மாதம் முழுவதுமே  ஆன்லைன்  மூலம்  விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பட்டதாரிகள் தேர்ச்சி பெற 45 மதிப்பெண்களும், பொது பிரிவை சேர்ந்த பட்டதாரிகள் தேர்ச்சி பெற 60 மதிப்பெண்களும் பெற வேண்டும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்


 இதன்படி இன்று நவம்பர் 1ம் தேதி புதன்கிழமை 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. http://trb.tn.gov.in என்ற  அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம்   தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web