நாளை முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!

 
டெட்

தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ஏற்கனவே பொறியியல்,  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி தேர்வு முதலாமாண்டு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூன் 23 ம் தேதியும், இரண்டாமாண்டு மாணவர்களுக்கு ஜூன் 22 ம் தேதியும் தேர்வு  தொடங்க இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி மற்றும் தேர்வுக்கான கட்டணம் குறித்தான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 

tet exam
அதன்படி தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் நாளை மே 9ம் தேதி  முதல் மே 13 ம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்ததாக, இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்விற்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in  மூலம்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TET Exam

அத்துடன்  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சான்றிதழ்கள் மற்றும் தேர்வுக் கட்டணத்துடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஒரு பாடத்துக்கான தேர்வு கட்டணம் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் ரூ.100, பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70  இதற்கான விண்ணப்பங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் மே 13ம் தேதியுடன் முடிவடையும் நிலையில்  அதன் பிறகு விண்ணப்பிப்பவர்கள்  கூடுதல் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். அபராதத்தொகையுடன்  மே 15, 16 தேதிகள் வரை  விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web