நாளை முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள்!

 
கல்லூரி மாணவிகள்

 நாளை தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு  பொதுத்தேர்வு   முடிவுகள் வெளியாக உள்ளன. பள்ளிப் படிப்பை முடிந்த மாணவர்கள் கல்லூரியில் சேரும் வகையில், முதலாம் ஆண்டு கலை அறிவியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் குறித்த  அறிவிப்பு வெளியாகியுள்ளது.  உயர்கல்வித்துறை இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம் முழுவதும் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

கல்லூரி

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான   www.tngasa.in மூலம் நாளை முதல்   பதிவு செய்யலாம்.  இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் ( மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.   
விண்ணப்பக் கட்டணம்  : ரூ.48/-
பதிவுக் கட்டணம் : ரூ.2/-
SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.
பதிவுக் கட்டணம் : ரூ.2/-

பொறியியல் கல்லூரி
கட்டணம் செலுத்தும் முறை


விண்ணப்ப மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI  இணையதளம் மூலம்  செலுத்தலாம்.  கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில்  "The Director, Directorate of Collegiate Education, Chennai 15" என்ற பெயரில் நாளை மே 6ம் தேதி அல்லது  அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவோ அல்லது நேரடியாகவோ செலுத்தலாம். கால மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம்  அறிந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு  044-24343106 / 24342911 அழைக்குமாறும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web