இன்று முதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் துவங்கியது... ஆகஸ்ட் 8 கடைசி தேதி!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், 21 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி என 81 மருத்துவ கல்லூரிகள் உள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 11,500 மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்களில் மட்டும், மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதேபோல, அரசு ஒதுக்கீட்டுக்கான மொத்த இடங்களில் 7.5 சதவீதம், தமிழக அரசு கொண்டு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடாக வழங்கப்படுகிறது.
அரசு, தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர்சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் https://tnmedicalselection.net மற்றும் https://tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் ஆன்லைன் மூலமாக இந்த மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து மருத்துவ கல்வி மாணவர் தேர்வு குழு செயலர் பி.அருணலதாவிடம் கேட்ட போது, ‘‘எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இன்று ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. அங்கு முதல் சுற்று முடிந்ததும், தமிழகத்தில் முதல் சுற்று கலந்தாய்வு தொடங்கும்’’ என்றார்.
தமிழகத்தில் 1,52,920 பேர் நீட் தேர்வு எழுதியதில், 89,198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 11,500 மருத்துவ இடங்கள் உள்ள நிலையில், ஒரு இடத்துக்கு 7 பேர் போட்டியில் உள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி தொடங்குகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!