மகளிர் உரிமைத் தொகை , புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள்!

 
புதிய ரேஷன்

 தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 2023 செப்டம்பர் முதல் மாதம் தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ1000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த பணம் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் என பலரும் விண்ணப்பிக்கத் தயாராகி வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த 3 மாதங்களாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை.

மகளிர் உரிமை தொகை

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டனர். இதனையடுத்து தற்போது தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல்  தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளும் விண்ணப்பிக்கவும், புதிய விண்ணப்பங்களை பெறவும் முடியாது என அறிவிக்கப்பட்டு இருந்தது. ரேஷன் கார்டுகளுக்கான புதிய விண்ணப்பங்களும்  வழங்கப்பட உள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  ஒரு சில நாட்களில்  வெளியிடப்பட்டு தகுதியான நபர்களுக்கு ஜூலை முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், புதிய விண்ணப்பங்களும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web