செப்.10க்குள் வைக்கம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.. தலைமை செயலாளர் அறிவிப்பு!

 
 தலைமை செயலகம்
 

'வைக்கம் விருது'க்கான விண்ணப்பங்களை செப்​.10-ம் தேதிக்குள் அனுப்பலாம் என தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு தலைமை செயலகம்

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி, சட்டப்​பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ''சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய பெரியாரை நினைவு​கூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டு​தோறும் 'வைக்கம் விருது' சமூகநீதி நாளான செப்​.17-ம் தேதி அரசால் வழங்கப்படும்'' என்று 110-​விதியின் கீழ் அறிவித்​தார்.

தலைமைச் செயலகம்

அந்த வகையில் நடப்பாண்டும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் தங்கப்பதக்கம் உள்ளடக்கிய விருது முதல்வரால் வழங்கப்பட​இருக்கிறது. இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க விரும்புவோர், மாவட்ட ஆட்சியர் பரிந்துரை மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன், பொதுத்​துறை செயலாளரிடம் செப்​.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?