ஜூன் 12 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு !! மாணவர்களே மிஸ் பண்ணீடாதீங்க!!

 
கால்நடை மருத்துவ படிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 8ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கால்நடை மருத்துவ படிப்புக்களுக்கு ஜூன் 12 ம் தேதி திங்கட்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ படிப்பு

அதன்படி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை , நாமக்கல் ,திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை ,தேனி வீரபாண்டி  என 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து   ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 660 இடங்கள் காலியாக உள்ளன . திருநெல்வேலி, ஒரத்தநாடு, சென்னை, நாமக்கல்  என 4 கல்லூரிகளில் 420 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.  இதில் தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.

கால்நடை மருத்துவ படிப்பு
 கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு வருகிற 12-ம் தேதி முதல்  https://adm.tanuvas.ac.in என்ற  அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம்  விண்ணப்பிக்கலாம் . ஜூன் 12ம் தேதி திங்கட்கிழமை  முதல் ஜூன் 30 ம் தேதி வெள்ளிக்கிழமை  மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் , 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்  அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள் , உணவு தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள்,  பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்களிலும் மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web