இன்று முதல் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்!

 
ரேஷன்

 இந்தியா முழுவதும் தேர்தல் விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதனையடுத்து  இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தமிழகத்தில்  இன்று முதல் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் https://www.tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இ சேவை மையம் மூலமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன்

 ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்கள் நிலையை தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர புதிய விண்ணப்பங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இன்று முதல் ரேஷன் கார்டில் திருத்தங்களும் மேற்கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web