உடனே விண்ணப்பியுங்க... பொதுத்துறை வங்கிகளில் 1,007 பணியிடங்கள் !

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: சிறப்பு அதிகாரி (எஸ்.ஓ)
காலிப்பணியிடங்கள்: 1,007
கல்வி தகுதி: என்ஜீனியரிங் டிகிரி, முதுகலை பட்டம் 65 சதவீத மதிப்பெண்களுக்க்கு குறையாமல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். கல்வி தகுதி பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும்.
வயது வரம்பு: 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்
மாதச்சம்பளம் : ரூ.48480 – 85920/-
தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதன்மை தேர்வு : தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், திண்டுக்கல், தரம்புரி, நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரம் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
தேர்வுக்கட்டணம்: ரூ.850/-
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.07.2025
கூடுதல் தகவல்கள் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ibps.in/index.php/specialist-officers-xv/ மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!