செஞ்சி மஸ்தானுக்கு பதில் ப.சேகர் நியமனம்... பரபரக்கும் அரசியல் வட்டாரங்கள்!

 
செஞ்சி மஸ்தான் சேகர்

 விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பிறகு  விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் செயலாளர் பதவியில் இருந்து செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக, ப.சேகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செஞ்சி மஸ்தான்
அத்துடன்  திமுகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கௌதம சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.  பொதுச் செயலாளர் துரைமுருகன் இது குறித்து விழுப்புரம் மாவட்டத்தின் செயலாளராகப் பணிபுரிந்து  வந்த புகழேந்தி மறைந்ததையடுத்து, புதிய நிர்வாகி நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும்  திமுக நிர்வாக மாற்றத்தில்  ஈடுபட்டுள்ளது. தற்பொழுது, தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட கௌதம சிகாமணி, அமைச்சர் பொன்முடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web