நாளை உள்ளூர் விடுமுறை.. மாவட்ட கலெக்டர் திடீர் அறிவிப்பு!

 
உள்ளூர் விடுமுறை

 உலகம் முழுவதும் உள்ள அனைத்து மாரியம்மன் ஆலயங்களுக்கும் தலைமைப் பீடம் திருச்சியில் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில். இங்கு ஆண்டுதோறும் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.   அந்த வகையில் நடப்பாண்டில் திருவிழா   கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் அஷ்டபுஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக சிவப்பதத்தில் விக்ரம சிம்மாசனத்தில்  எழுந்தருளியுள்ளார்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்

திருவிழாவின் நிகழ்வுகளாக ஏப்ரல் 15 ம் தேதியான இன்று வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீதி உலா செல்கிறார்.  முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா ஏப்ரல் 16ம் தேதி நாளை  நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட மக்கள் விழாவில் கலந்து கொள்ளும் வகையில் ஏப்ரல் 16ம் தேதி  திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் ஜூன் 8ம் தேதி அன்று பணிநாளாக செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.  சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்க்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி 2வது வெள்ளிக்கிழமை! திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவையொட்டி, ஏப்ரல் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இந்த குறிப்பிட்ட விடுமுறை நாளில் திருச்சியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு பொருந்தும். தற்போது தேர்வு நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை  பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web