மாநிலம் முழுவதும் 2500 கோவில்களில் அரளிப்பூவிற்கு தடை... உதவி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை!

 
அரளிப்பூ
 

கேரளாவில் ஆலப்புழாவில் வசித்து வந்த இளம் நர்சிங் பட்டதாரிப் பெண் சூர்யா . இவர் மொபைலில் பேசிக்கொண்டே அருகில் இருந்த  அரளி மலர் இதழ்களை சாப்பிட்டதால் அகால மரணமடைந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இவருக்கு பிரிட்டனில் செவிலியர் பணி கிடைத்த நிலையில் விமான நிலையம் செல்வதற்கு சில மணி நேரம் முன்னதாக எதேச்சையாக இந்த செயல் நடந்து பெரும் விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனால்  திடீர்  வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அரளிப்பூ

அடுத்த நாள்  சிகிச்சை பலனின்றி அடுத்த நாள்  பரிதாபமாக உயிரிழந்தார்.அவரது மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தபப்ட்டு வந்த நிலையில்  காவல்துறை அரளி மலர்களை சாப்பிட்டதே அவரது மரணத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ளது.  கேரளாவில்  திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சுமார் 1,200 கோவில்கள் மற்றும்   மலபார் தேவசம்போர்டு சார்பில்  1,300 கோவில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 2500 கோவில்களிலும் இனி  அரளி பூக்களை  பிரசாதமாக வழங்கிட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அரளிப்பூ

இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு  செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதில்  திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் அரளிப் பூக்கள் தவிர்க்கப்படும். பக்தர்கள் அதற்கு மாற்றாக  துளசி, இட்லிபூ, ரோசாப்பூக்களை நைவேத்தியம் மற்றும் பிரசாதத்துக்கு வழங்கி அருளை பெற்றுச் செல்லும்படி  கேட்டுக்கொள்ளப் படுகிறது. கோவில்  பூஜைகளில் அரளிப்பூக்களைப் பயன்படுத்தினாலும் இன் அது  பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட மாட்டாது. இது குறித்து அனைத்து உதவி ஆணையர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.  அதே போல்  மலபார் தேவசம்போர்டுக்கு உட்பட்ட கோவில்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக அரளிப்பூ தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web