அரசு அதிகாரி அடாவடி!! ஒரே ஒரு மொபைலுக்காக ஏரியில் இருந்து 21 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றச் சொன்ன கொடூரம்!!

 
ராஜேஷ்

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உணவுத்துறையில் ஆய்வாளராக ராஜேஷ் விஸ்வாஸ் பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறையை கொண்டாட கேர்கட்டா என்ற நீர்தேக்கத்திற்குச் சென்றுள்ளார். நீர்தேக்கத்தை சுற்றிப் பார்த்தபோது ராஜேஷ் விஸ்வாஸ், தனது விலையுயர்ந்த ஸ்மார்ட்போனில் செல்பி எடுத்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவரது செல்போன் நீர்தேக்கத்திற்குள் தவறி விழுந்துள்ளது. இதனால் பதறிபோன அவர் தன்னுடைய செல்போனை எப்படியும் எடுக்கவேண்டும் என திட்டம்போட்டுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்களை அழைத்து, தான் அரசு அதிகாரி எனக்கூறிய ராஜேஷ் விஸ்வாஸ், தனது செல்போனை தேடி கண்டுபிடித்து தரும்படி கூறியுள்ளர். 


அதிகாரி கூறியதால் 15 அடி ஆழ நீர்தேக்கத்திற்குள் விழுந்த போனை தண்ணீரில் குதித்து அங்கிருந்தவர்கள் தேடியுள்ளனர். எனினும் செல்போன் கிடைக்கவில்லை. அதன்பின்னர், அதிகாரி செய்த காரியம் தான் தற்போது இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுதியுள்ளது. 

தனது செல்போனை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அதிகாரி ராஜேஷ் விஸ்வாஸ், நீர்தேக்கத்தில் உள்ள அனைத்து நீரையும் மோட்டார் மூலம் வெளியேற்றியுள்ளார். இதற்காக இரண்டு 30HP மோட்டார்களை கொண்டு தொடர்ந்து மூன்று நாள்கள் அவற்றை ஓட வைத்து நீர்தேக்கத்தில் இருந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியுள்ளார்.

ராஜேஷ்

இதனிடையே, இந்த விவகாரம் நீர் மேலான்மை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. அங்கு விரைந்த அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றும் செயலை தடுத்து நிறுத்தினர். அதற்குள்ளாக நீர் மட்டம் வெறும் 6 அடியாக குறைந்துள்ளது. அதிகாரி ராஜேஷ் விஸ்வாஸ் திட்டம்போட்டபடி அவரது விலை உயர்ந்த செல்போன் கிடைத்துவிட்டது. எனினும் அது வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. 

அதிகாரியின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து, சர்ச்சை அதிகாரி ராஜேஷை உடனடியாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா உத்தரவிட்டுள்ளார். மேலும், விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அமைச்சர் அமராஜித் பகத் உறுதி அளித்துள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web