திருவண்ணாமலை போறீங்களா?! சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு ரயில்கள்!!

 
ரயில்

பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பல உற்சவங்கள், திருவிழாக்கள் நடத்தப்பட்டாலும் பௌர்ணமி வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு மலையே சிவபெருமானாக வழிபடப் படுவதால் பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் 14 கிமீ மலையை வலம் வருவது வாடிக்கை. அனைத்து பௌர்ணமிகளிலும் மலை வலம் வருவார்கள் என்ற போதிலும் சித்ரா பௌர்ணமி கூடுதல் சிறப்பு வாய்ந்தது. திருவண்ணாமலையை பொறுத்தவரை  கார்த்திகை பௌர்ணமி தீபத் திருவிழாவின் போதும், சித்ரா பௌர்ணமியின் போதும் லட்சணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் சித்ரா பௌர்ணமி மே 4ம் தேதி நாளை வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி மறுநாள் 5ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு நிறைவடைகின்றது.

ரயில்

அந்த வகையில் நடப்பாண்டு சித்ரா பௌர்ணமிக்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், உணவு, கழிப்பிட மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்காக மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வேலூர் - திருவண்ணாமலை இடையே மே 4 மற்றும் 5ம் தேதி வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் கனியம்பாடி, கண்ணமங்கலம் , ஆரணி சாலை வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு  திருவண்ணாமலை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. திருவண்ணாமலை - வேலூர் இடையே மே 5 மற்றும் 6 தேதி -திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்படுகிறது.

ரயில்

வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை காலை 5.35 மணிக்கு சென்றடைகிறது. விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே மே 5ம் தேதி -விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது.  திருவண்ணாமலை ரயில் நிலையத்தை முற்பகல் 11 மணிக்கு வந்தடைகிறது. திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12.40 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு தண்டரை , அண்டம்பள்ளம், ஆதிச்சநல்லூர் வழியாக விழுப்புரம் ரயில் நிலையத்தை பிற்பகல் 2.15 மணிக்கு சென்றடைகிறது. வேலூர் - திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சென்னை கடற்கரைக்கும், திருவண்ணாமலை , விழுப்புரம் இடையே 4, 5, 6  தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் தாம்பரம் வரையும் நீட்டிக்கப்படும், என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web