கணவன் மனைவிக்கிடையே தகராறு.. தடுக்கச் சென்ற இளம்பெண் குத்திக் கொலை!

 
ஜோதி

மகாராஷ்டிரா மாநிலம் மும்ரா பகுதியில் நாகேஷ்( 23) - கிரண் (21) என்ற இளம் தம்பதி வசித்து வந்தனர். காதலர்களாக இருந்த இருவரும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இளம் தம்பதி இடையே அண்மைக்காலமாக அடிக்கடி சண்டை ஏற்பட தொடங்கியது.

இதனால் மனஉளைச்சல் அடைந்த கிரண், காதல் கணவரை விட்டு பிரிந்து தோழி ஜோதி (19) என்பவரின் வீட்டில் தங்கி இருந்தார். மனைவியை தேடிவந்த நாகேஷ். அவர் இருக்கும் இடம் தெரிந்துகொண்டார். பின்னர் தனது மனைவியை உடன் அழைத்து வர ஜோதியின் வீட்டிற்கு சென்றார். அங்கு மனைவியிடம் தனியாக பேச வேண்டும் என கூறி அறைக்கு அழைத்து சென்றார்.

ஜோதி

அறையில் இருவரும் தனியாக பேசும்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாகேஷ் கத்தியை எடுத்து மனைவியை குத்தி உள்ளார். இதனை கண்ட தோழி ஜோதி தடுக்க முயன்ற போது அவருக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது. பின்னர் அங்கிருந்து நாகேஷ் தப்பியோடினார். 

ஜோதி

இதனிடையே, கத்திக்குத்தில் படுகாயமடைந்த ஜோதி ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று கத்திக்குத்தில் காயமடைந்த கிரணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web