அர்ஜூன் டெண்டுல்கரை நாய் கடித்ததாக தகவல்... வைரலாகும் வீடியோ!

 
அர்ஜூன் டெண்டுல்கர்

தனது மகன் அர்ஜூன் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் போதே... அவன் சிறுவன். அவன் மீது எதிர்பார்ப்புகளைத் திணிக்காதீர்கள். அவன், அவனது விளையாட்டை விளையாடட்டும் என்று டெண்டுல்கர் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், டெண்டுல்கர் மகன் என்கிற அடையாளத்தையும், அறிமுகத்தையும் அத்தனை எளிதில் மறக்கடித்து விட முடியுமா என்ன? அர்ஜூன் களமிறங்கும் போதும், போட்டியில் ஆடும் அணிகள் தேர்வு அறிவிக்கப்படும் போதெல்லாம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிற துவங்கியது.


இந்நிலையில், சமீபத்தில் தன்னை நாய் கடித்து விட்டதாக அர்ஜுன் டெண்டுல்கர், மைதானத்தில் யுத்விர் சிங்கிடம்  கூறுகிற வீடியோ வைரலாகி வருகிறது.  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், தன்னை சமீபத்தில் நாய் ஒன்று கடித்ததை யுத்விர் சிங்கிடம் அர்ஜூன் டெண்டுல்கர் வெளிப்படுத்தி உள்ளார்.

அர்ஜூன் டெண்டுல்கர்

லக்னோவில் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கும் போட்டி. புள்ளிகள் பட்டியலில் ஏதேனும் ஒரு அணி தங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இந்த போட்டி முக்கியமானதாக கருதப்பட்ட நிலையில், போட்டிக்கு முன்னதாக, நடப்பு சீசனில் அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கரை நாய் கடித்த செய்தி வெளியானது மும்பை ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைத் தந்தது.  லீக் சுற்றுகளுடன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் அர்ஜூன் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web