தம்பி ராமையா மகனை கரம் பிடித்த அர்ஜுன் மகள்.. வெகு விமர்சையாக நடந்து முடிந்த திருமணம்!

 
ஐஸ்வர்யா - உமாபதி

90களில் தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக கொடிகட்டி பறந்தவர் அர்ஜுன். இதனால் அவருக்கு ஆக்‌ஷன் கிங் என்ற பட்டத்தை வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர். லியோ படத்தில் விஜய்யை வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இவரது மகள் ஐஸ்வர்யாவும் சினிமாவில் நடித்து வரும் நிலையில் அவருக்கு இன்று திருமணம் நடந்தது. தம்பி ராமையா நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது குணச்சித்திர கலைஞராக பணியாற்றி வருகிறார். அவரது மகன் உமாபதியும் நடிகராக மாறியுள்ள நிலையில், அர்ஜுன்  மகளை ஐஸ்வர்யாவை காதலித்து வந்துள்ளார்.

ஐஸ்வர்யாவுக்கும், உமாபதிக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து இன்று இருவருக்கும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் அர்ஜூனுக்கு சொந்தமான கெருகம்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், விஷால், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தை தொடர்ந்து இவர்களது திருமண வரவேற்பு ஜூன் 14ம் தேதி சென்னை நக்ஷத்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணியார் குடும்பம், அதாகப்பட்டது மகாஜனங்களே, தண்ணி வண்டி, பித்தல மாத்தி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் உமாபதி. இந்தப் படங்கள் தவிர, அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றபோது  மிகவும் பிரபலமானார். அப்போதுதான் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதல் மலர்ந்தது. இதையறிந்த இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி தற்போது திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண விழாவில் அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா இருவரும் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web