’ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. பெரும் அதிர்ச்சியடைந்தேன்’.. ராகுல் காந்தி இரங்கல்!

 
ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். நேற்று பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஆம்ஸ்ட்ராங்கின் உடலை இறுதிச் சடங்குகளுக்காக பொது இடத்தில் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான், திருமாவளவன், தவெக தலைவர் விஜய் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சமூக வலைதளங்களில் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழக அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமானவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என நம்புவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது X சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web