ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. ’தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது’.. மாயாவதி ஆவேசம்!

 
மாயாவதி

சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மாயாவதி

இன்று காலை 9.30 மணிக்கு உத்தரபிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மாயாவதி வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் பெரம்பூர் சென்றார் மாயாவதி. பின்னர், அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மாயாவதி அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கிருந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின் பேசிய மாயாவதி, "ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் பயணித்த ஆம்ஸ்ட்ராங் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை. உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை விரைந்து போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மாநில அரசு உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும். சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, எளிய மக்களின் நலன் காக்கப்பட வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளிக்கும். சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என பகுஜன் சமாஜ் கட்சியை கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web