புதிய கட்சியை தொடங்கிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் 2024 ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், வழக்கறிஞர் அருள், சிவசக்தி, ஹரிஹரன், மலர்க்கொடி, அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், ரவுடி நாகேந்திரன் , ரவுடி புதூர் அப்பு , சீசிங் ராஜா உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் மறைவை தொடர்ந்து அவரது மனைவி பொற்கொடி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகுகடந்த ஏப்ரல் மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று ஜூலை 5 ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினம். இந்தநாளில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார் அவரது மனைவி பொற்கொடி. கட்சிக்கான கொடியையும் இன்று அறிமுகப்படுத்தினார். முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலையை மகள் சாவித்திரி பாய் திறந்து வைத்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!