ஆம்ஸ்ட்ராங் மனைவி ஆளுநரை சந்திக்க அனுமதி!

 
ஆம்ஸ்ட்ராங்

 தமிழகத்தில் ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  சென்னை பெரம்பூரில் அவரது வீட்டிற்கு முன்பு  வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய  பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா, குன்றத்தூர் திருவேங்கடம் சந்தோஷ், செல்வராஜ் திருமலை உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.  

ஆம்ஸ்ட்ராங்

இந்நிலையில் கொலையாளிகள் 11 பேரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.குற்றவாளிகளில் ஒருவரான  திருவேங்கடம்  வழக்கு விசாரணைக்காக  புழல் நோக்கி அழைத்துச் சென்றனர். மாதவரம் ஆடு தொட்டிக்கு அருகில் அவர் தப்பி ஓட முயற்சித்தார்.  இதனையடுத்து புழல் வெஜிடேரியன் நகரில் காலி மனையில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டாயில் பதுங்கி இருந்த திருவேங்கடத்தை போலீசார்  சுற்றி வளைத்த போது, தான் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து  போலீசாரை நோக்கி சுட்டார்.

ஆம்ஸ்ட்ராங்

இதையடுத்து தனிப்படை காவல் ஆய்வாளர்  முகமது புகாரி ரவுடி திருவேங்கடத்தை துப்பாக்கியால் சுட்டார் .இதில் வலது பக்க வயிறு மற்றும் இடது மார்பில் குண்டுகள் பாய்ந்து திருவேங்கடம் உயிரிழந்தார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கணவர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும், அதற்கான மனுவுடன்  பொற்கொடி ஆளுநரை சந்திக்க உள்ளார். மேலும்  பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆளுநரை சந்திக்க பொற்கொடி அனுமதி கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!