பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல்.. பொது மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி!

 
ஆம்ஸ்ட்ராங்

சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

ஆம்ஸ்ட்ராங்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.போலீசார் முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன் ஆற்காட்டில் சுரேஷ்  கொலைச் சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் பின்னால் இருந்து செயல்பட்டதாகவும், எனவே அவரது சகோதரர் கூலிப்படை ஏவி அவரைக் கொன்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 8 பேர் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இன்று இறுதி அஞ்சலியுடன் தகனம் செய்யப்படுகிறது. சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web