ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது... ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்... 2,000 போலீசார் பாதுகாப்பு!

 
ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். 

பெரம்பூரில் உள்ள பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சித் தொண்டர்கள், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நி லையில், ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், செங்குன்றம் அருகேவுள்ள பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது.
ஆம்ஸ்ட்ராங்

மேலும், பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் அமைத்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பெரம்பூரில் இருந்து பொத்தூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்

பெரம்பூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், செங்குன்றம் அருகேவுள்ள பொத்தூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் மற்றும் மக்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஊர்வலத்தையொட்டி அந்த வழித்தடம் முழுவதும் 2,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web