ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளில் பழிதீர்த்த தம்பி... ஆம்ஸ்ட்ராங் கொலையில் அடுத்தடுத்து அதிர்ச்சி!

 
ஆம்ஸ்ட்ராங்
 


பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம் சாங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த 8 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் பழி தீர்க்க பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி மாநில தலைவராக நீண்ட காலமாக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் வட சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சட்டப் படிப்பு படித்திருந்த இவர் ஆரம்ப காலத்தில் அடிதடி, தகராறு உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கினார். பின்னர், நீதிமன்றம் சென்று தன் மீதான அனைத்து வழக்குகளிலும் இருந்து விடுதலையானார்.

ஆம்ஸ்ட்ராங்
இருப்பினும் பழைய குற்ற வழக்குகளில் இவரால் பாதிப்புக்கு உள்ளானர்கள் வெவ்வேறு குழுக்களாக செயல்பட்டு அவரை தீர்த்துக் கட்ட தக்க நேரம் பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால், ஆம்ஸ்ட்ராங் மிகவும் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தார். மேலும், அவரது பின்னணியில் அவரது ஆதரவாளர்கள் நிழல் போல் 24 மணி நேரமும் இரவு, பகலாக உடனிருந்தனர்.
ஆம்ஸ்ராங் யாரை பார்க்க விரும்புகிறாரோ அவரை மட்டும்தான் பார்ப்பார். அவரை யாரும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அதுபோன்ற கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார். 2008ம் ஆண்டில் உத்தரப் பிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவருமான மாயாவதியை அதே ஆண்டு டிசம்பர் 22ம் தேதி சென்னை அழைத்து வந்து மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தி அக்கட்சியினரிடையே நன்மதிப்பை பெற்றார். மேலும், தமிழகத்தில் தனக்கான தனி இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
ஆண்டு தோறும் அவரது செல்வாக்கு உயர்ந்து கொண்டே சென்றாலும், அவரால் பாதிக்கப்பட்டவர்கள், எதிரணியில் உள்ளோர், தொழில் போட்டியாளர்களிடமிருந்து அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. இதனால், அவர் பொது வெளியில் வெளியே வருவதை குறைத்துக் கொண்டார். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் மிக.. மிக.. முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே ஆதரவாளர்கள் புடைசூழ சென்று வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டினருகே தனது நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அதை கும்பல் ஒன்று நோட்டம் விட்டது. சிறிது நேரத்தில் அங்கு இருசக்கர வாகனங்களில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் வந்த வேகத்தில் ஆம்சாங்கை வெட்டி சாய்த்தது பின்னர் அங்கிருந்து தப்பியது.

போலீஸ்
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை எடுத்து ஆயிரம் விளக்கு உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது இது ஒரு புறம் இருக்க ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய கூடுதல் காவல் ஆணையர் அஸ்ட்ரா கார்க் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
 முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே கடந்தாண்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு கொலையாக பழி தீர்க்க பட்டதா என்ற கோணத்திலும் விசாரணையை தனிப்படை போலீசார் முடிக்கி விட்டுள்ளனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடம் அதை சுற்றி பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்தும் மீதமுள்ள தலைம்ஃறைவாக உள்ள ரவுடிகளையும் அதன் பின்னணியில் இருந்து இயக்கியவர்களையும் தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஆம்ஸ்ட்ராங் வீடு உள்பட சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஆற்காடு சுரேஷ் பிறந்தநாள் என்பதால், கொலைக்கு பழிதீர்க்க நேற்றைய தினத்தை தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. சரணடைந்த 8 பேரில் ஆற்காடு சுரேஷின் தம்பியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web