சென்னை கமிஷனராக அருண் ஐபிஎஸ் நியமனம்... சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம்!

 
சந்தீப் ராய்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்  ஆம்ஸ்ட்ராங்  வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகியிருப்பதாக  எதிர்கட்சிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தன.   தலைநகர் சென்னையில் கொலை மற்றும் போதைப்பொருள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சந்தீப் ராய் அருண்

இந்நிலையில் தற்போது சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  அவர் காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு  அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது புதிய கமிஷனர் ஆக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்தீப் ராய்


இவர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது சென்னை மாநகர புதிய கமிஷனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சந்தீப் ராய் ரத்தோர் தன்னுடைய பொறுப்புகளை புதிய காவல் ஆணையரிடம் ஒப்படைத்த நிலையில் அவர் தற்போது சென்னையின்  110வது கமிஷனர் ஆக பொறுப்பேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web