அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. உச்சநீதிமன்றம் திடீர் உத்தரவு!

 
அரவிந்த் கெஜ்ரிவால்

 டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில்  முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதுபானக் கொள்கை முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்த நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இந்த வழக்கில் தான் கைதாகி ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் அடுத்தடுத்து ஆம் ஆத்மியின் பல முக்கிய தலைவர்களும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.இறுதியாக டெல்லி முதல்வரான கெஜ்ரிவாலும்   மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

 அரவிந்த் கெஜ்ரிவால்

 அவர் சிறையில் இருப்பதால்  முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தாலும் தொடர்ந்து டெல்லி முதல்வராகவே நீடித்து வருகிறார். அங்கிருந்து மக்களுக்குக் கடிதங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அதே நேரத்தில்  கெஜ்ரிவால் ஜாமீன் கோரி  உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 கெஜ்ரிவால்

மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில்  கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.எந்த அரசியல் தலைவருக்கும் பிரச்சாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை என அமலாக்கத் துறை காரணம் காட்டியது.  இந்நிலையில்   டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் அவரது ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web