140 கோடி மக்களின் பிரதிநிதியாக வாழ்த்துக்களை கொண்டு வந்துள்ளேன்... கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!

 
கானா மோடி

இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக கானா நாட்டிற்கு சென்றுள்ளார். அந்த நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனையடுத்து கானா நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றினார். அதில் உலகின் வளர்ச்சிக்கு உந்து விசையாக இந்தியா இருப்பதாக கூறினார். பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரான்ஸ் செல்வதற்கு முன்னதாக 8 நாள்களில் 5 நாடுகளுக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில், கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதல் நாளான நேற்று ஜூலை 2ம் தேதி கானா தலைநகர் அக்ராவில் பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் கானாவின் பாரம்பரிய முறைப்படி 21 துப்பாக்கிகள் ஏந்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கானா அதிபர் ஜான் திராமணி மஹாமா பிரதமர் மோடியை கட்டியணைத்து வரவேற்றார்.

பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கானாவுக்குச் செல்லும் மோடி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு கானாவுக்குச் செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மோடி பேசுகையில், "மரியாதைக்குரிய கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதில் இருப்பது மிகவும் பெருமைக்குரியது. ஜனநாயக உணர்வை வெளிப்படுத்தும் கானாவிலிருப்பதில் நான் மிகவும் பாக்கியசாலி.

கானா மோடி

உலகின் 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவிலிருந்து ஒரு பிரதிநிதியாக நல்லெண்ணம் மற்றும் வாழ்த்துகளை உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன். கானா தங்கத்தின் நாடு. தங்கம் உங்கள் மண்ணுக்கு கீழ் மட்டும் இல்லை. உங்களது இதயத்திலும் இருக்கிறது. ஆருயிர் நண்பர் மஹாமாவின் கைகளில் இருந்து நாட்டின் உயரிய விருது அளித்த கானாவிற்கு, 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவின் சார்பில் நன்றி. 2047 ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற மக்கள் முடிவுசெய்திருக்கின்றனர்" என உரையாற்றினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?