நாட்டையே விற்று விடுவார்கள் போல... சாலமன் பாப்பையா கண்டன வீடியோ..!!

 
சாலமன் பாப்பையா

மதுரை அரசரடியில் ரயில்வே விளையாட்டு மைதானம்  அமைந்துள்ளது. இந்த மைதானம் ரயில்வேக்கு சொந்தமானது. இந்த மைதானம் குற்றவாளிகளின் புகலிடமாக சமீபகாலமாக திகழ்வதாக  ரயில்வே நிர்வாகம் குற்றம் சாட்டி வந்த நிலையில் இதனை தனியாருக்கு விற்க முனைந்துள்ளது. இதனை எதிர்த்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார்.  


 

மதுரை ரயில்வே மைதானம் மற்றும் ரயில்வே காலனியில் உள்ள 40.26 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த மைதானத்தை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். மரங்களும் அங்கே காலம் காலமாக இருந்து வருகின்றன. உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டுமென  வெங்கடேசன்  வலியுறுத்தினார். இந்த கையெழுத்து இயக்கத்திற்கு மதுரையைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சாலமன் பாப்பையா
இந்நிலையில் இன்று மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிரான கையெழுத்தியக்கத்தில் தமிழறிஞர் பத்மஸ்ரீ சாலமன்பாப்பையா  கையெழுத்திட்டார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் சாலமன் பாப்பையா  “இரயில்வே சொத்து தனியாருக்கல்ல, மக்களுக்கானது. போகிறபோக்கைப் பார்த்தால் நாட்டையே விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது. இதை அனுமதிக்ககூடாது” எனவும்  பேராசிரியர் சாலமன் பாப்பையா கூறியுள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web