ஓடும் பேருந்தில் போதையில் அத்துமீறல்... தட்டிக் கேட்ட நடத்துனர் கையை உடைத்த இளைஞர்!

 
நடத்துனர்

பேருந்தில் நடத்துனராக இருப்பதே பெரிய ரோதனையா போச்சு... இதுக்கு மூட்டை சுமக்க போகலாம் சார் என்ற ஓட்டுனர் நடத்துனரின் புலம்பல்கள் தொடர்கின்றன. ஒரு பக்கம் எத்தனை முறை சொன்னாலும் கொஞ்சமும் அடங்காமல் படிக்கட்டில் தொங்கி கொண்டே பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், போதை ஆசாமிகள், திருட்டு , வழிப்பறி கும்பல் எவன் தப்பு பண்ணினாலும் நான் தான் பதில் சொல்லணும் என்கின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் கடலூரில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தவறாக பேசியதைக் கண்டித்ததால் மர்ம நபர் ஒருவர் நடத்துனரின் கையை உடைத்த சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடலூர் மாவட்டம், திருவதிகை கிராமத்தில் வசித்து வருபவர் 59 வயது ராஜாங்கம். இவர் அம்பத்தூர் எஸ்டேட் பணிமனையில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். ஜூன் 8ம் தேதி பிற்பகல்அம்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து அயப்பாக்கம் செல்லும் அரசு பேருந்து தடம் எண்: 73சி பேருந்தில் பணியில் இருந்தார். அப்போது, பேருந்தில் ஏறிய 2 போதை ஆசாமிகள் தகாத வார்த்தைகளைப் பேசி கொண்டே வந்தனர். 

அரசு பேருந்து
இதனை நடத்துனர் ராஜாங்கம் மற்றும் ஓட்டுனர் கோபால் இருவரும் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பேருந்து அயப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது, ராஜாங்கத்தை தகாத வார்த்தைகள் பேசி, அடித்து கீழே தள்ளி விட்டு தப்பி சென்று விட்டனர்.  இதில் படுகாயமடைந்த ராஜாங்கம் எலும்பு முறிவு ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு  மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.  

போலீஸ்

அயப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 31 வயது  சுரேசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.  அவர் மீது வழக்குப்பதிவு  செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web