ரூ.2000 நோட்டே வேணாம்... ரூ.500, ரூ.200 என யூ-ட்யூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த ஆசாமி!

 
பெங்களூரு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கே.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். முறையாக வேலைக்கு செல்லாத இவர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார். இதற்காக யூடியூப் வீடியோ தலத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது எப்படி என்று பார்த்து வந்துள்ளார்.

இதற்காக, தனக்கு கிடைத்த தகவல்கள் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து கலர் பிரிண்டர், ஸ்கேனர் ஆகியவற்றை வாங்கி வந்த கோபால் ஒரிஜினல் நோட்டுக்களை ஸ்கேன் செய்து அதன் மூலம் கள்ள நோட்டுகளை தயார் செய்தார். பின்னர் அவற்றை மதன பள்ளியில் உள்ள சந்தைக்கு எடுத்து சென்று காய்கறி வாங்கிவந்துள்ளார். கிட்டதட்ட இரண்டு வாரங்களாக இப்படியே கள்ள ரூபாய் நோட்டுகளை அவரே அச்சடித்து மாற்றியும் செலவு செய்து வந்தார்.

பெங்களூரு

இந்நிலையில் நேற்று மீண்டும் மதனப்பள்ளி சந்தையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற கோபாலை, வியாபாரிகள் மடக்கிபிடித்தனர்.  தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அந்நபரிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 500, 200, 100 ஆகிய மதிப்பு கொண்ட கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

பெங்களூரு

பின்னர் கோபாலை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையின் போது யூடியூபைப் பார்த்து கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டதாக தெரிவித்தார். கோபாலிடமிருந்து 12,000 ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், 5 நூறு ரூபாய் கள்ள நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் கள்ள நோட்டுகள் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கலர் பிரிண்டர், மை பாட்டில்கள், நக பாலிஷ் ஆகிவற்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web