அசத்துது திருச்சி... பாதுகாப்பு வளையத்திற்குள் பெண்கள்... ரோந்து வாகனங்கள்... 54 காவல் ஆளிநர்களுக்கு பாடி கேமராக்கள்!

 
சத்தியபிரியா சத்தியப்பிரியா

தமிழக காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் உத்தரவின்படி, தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக அரசால் திருச்சி மாநகருக்கு 54 உடல் கேமிராக்கள் வழங்கப்பட்டது. இந்த வகை கேமராக்கள் ரோந்து பணியின் போது சம்பவ இடத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்து சேமித்து வைக்கும்.மேலும் வழக்குகளை அறிவியல் முறையில் நிருபித்து தண்டணை பெற்றுத் தர ஏதுவாக இருக்கும். பணியில் வெளிப்படைத்தன்மை மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க இது உதவும்.

நேற்று மே 22ம் தேதி காலை திருச்சி மன்னார்புரம் ரவுண்டானவில் திருச்சி மாநகரத்தில் உள்ள 14 ரோந்து (Beat) வாகனங்கள். 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் 37 மாநகர பீட் ரோந்து பணிக்கு என மொத்தம் 54 பாடி கேமராக்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, இ.கா.ப.,வழங்கினார்.

சத்தியபிரியா சத்தியப்பிரியா

இந்நிகழ்வில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பேசுகையில் உடலில் அணிந்த கேமராக்கள் வழக்குகளை சிறப்பாக முடிவுக்கு கொண்டு வர உதவும் என்றார். மேற்கண்ட நிகழ்ச்சியில் தலைமையிடம் மற்றும் தெற்கு காவல் துணை ஆணையர்கள் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள், ரோந்து காவல் ஆளிநர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

திருச்சி ரோந்து

இப்படி காவல் ஆளிநர்கள் உடல் கேமிராக்களை அணிந்து ரோந்து பணிகளுக்குச் செல்லும் போதும், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதும் பெரும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக மகளிர் கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழாக்கள் போன்ற கூட்டமான இடங்களில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web