தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்... திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தஞ்சை பெரிய கோவிலில் 23வது ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா இன்று கணபதி ஹோமத்துடன் விமரிசையாக தொடங்கப்பட்டுள்ளது. வராகி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாலை ஆஷாட நவராத்திரி முதல் நாள் விஷேச அலங்காரமான இனிப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, நாளை ஜூ 26ம் தேதி வியாழக்கிழமை மஞ்சள் அலங்காரமும், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை குங்கும அலங்காரமும், 28ம் தேதி சந்தன அலங்காரமும், 29ம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 30ம் தேதி மாதுளை அலங்காரமும் அம்மனுக்கு செய்யப்படுகிறது.
ஜூலை 1ம் தேதி நவதானிய அலங்காரத்திலும், 2ம் தேதி வெண்ணெய் அலங்காரத்திலும், 3ம் தேதி கனிவகை அலங்காரத்திலும், 4ம் தேதி காய்கறி அலங்காரத்திலும், 5ம் தேதி புஷ்ப அலங்காரத்திலும் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் 5ம் தேதி மாலை வாணவேடிக்கையுடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வராகி அம்மன் எழுந்தருளி 4 ராஜவீதிகளில் வீதிஉலா காட்சியும் நடைபெறுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!