ஆசிய துப்பாக்கி சுடுதல்: 3 வெண்கலப் பதக்கங்களுடன் மனு பார்க்கர் சாதனை!

 
ஆசிய துப்பாக்கி சுடுதல் மனு பார்க்கர்

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று இந்திய வீராங்கனை மனு பார்க்கர் சாதனை படைத்துள்ளார்.  இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆசிய சாம்பியன்ஷிப்பில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று 4வது இடத்தில் நிறைவு செய்தேன். தனித்துவமான சூழ்நிலையில்  போட்டியிட்டேன். இருப்பினும் எனது சிறப்பான செயல்பாடுகளை வழங்கினேன்.

மனு பாக்கர்

எனது அணியின் சிறப்பான உழைப்பினை மனமாறப் பாராட்டுகிறேன். நாங்கள் இன்னும் சிறப்பாக செயலாற்ற கூடுதலாக உழைப்போம். ஜெய் ஹிந்த்.பின் குறிப்பு- முதல் புகைப்படம், சில அற்புதமான நினைவுகளுக்கு ராஹி சர்னோபத் அக்காவுக்கு மிக்க நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

மனு பார்க்கர்

பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று மனு பாக்கர் மிகவும் புகழ் பெற்றார். ஆசிய துப்பாக்கி சுடுதலில் அவர் கலந்து கொண்டு 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?