டிர்ம்ப் நண்பர் சார்லி கிர்க் படுகொலை ... செப்டம்பர் 14 வரை அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்!
அமெரிக்காவில் வலதுசாரி ஆர்வலர் சார்லி கிர்க். இவர் டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ இணை நிறுவனரும் கூட இவர் செப்டம்பர் 10ம் தேதி உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். 31 வயதான கிர்க், அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர். இந்த சம்பவம், அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உட்டா மாகாண ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் “அரசியல் படுகொலை” என விவரித்து, “இது மாகாணத்திற்கும், நாட்டிற்கும் இருண்ட நாள்” என்று தெரிவித்தார். கிர்க், “The American Comeback” என்ற தலைப்பில் நடந்த திறந்தவெளி விவாத நிகழ்ச்சியில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களில், கிர்க் கழுத்தில் தாக்கப்பட்டு, இரத்தம் பெருக்கெடுத்து மயங்கி சரிவது பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதல், நிகழ்ச்சியில் இருந்த மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. உட்டா பல்கலைக்கழக காவல்துறை, வளாகத்தை காலி செய்து, கட்டிடம் கட்டிடமாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. தாக்குதலுக்கு பொறுப்பான ஒரு “நபர்” காவலில் எடுக்கப்பட்டார், ஆனால் பின்னர் விடுவிக்கப்பட்டதாக எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப், இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி, தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், “சார்லி கிர்க், இளைஞர்களின் இதயத்தை புரிந்து கொண்ட ஒரு மாபெரும் மனிதர்.

அவர் அனைவராலும், குறிப்பாக என்னால், மிகவும் மதிக்கப்பட்டவர். இப்போது அவர் இல்லை,” என்று பதிவிட்டார். இது குறித்து அவர் “சார்லி கிர்க் மீதான இந்த கொடூரமான அரசியல் படுகொலை குறித்து நான் துக்கத்திலும், ஆவேசத்திலும் உள்ளேன். அவரது மரபு என்றென்றும் நீடிக்கும். சார்லி பேச்சு சுதந்திரம், குடியுரிமை, சட்டத்தின் ஆட்சி, மற்றும் கடவுளின் மீதான பக்தியை ஆதரித்தவர். இந்த மதிப்புகளை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்,” மேலும், “இந்த படுகொலைக்கு காரணமான ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு தண்டிப்பேன்,” என ஆவேசமாக உறுதியளித்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்க தேசியக் கொடி, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையிலும், டிரம்பின் சொத்துகளிலும், செப்டம்பர் 14, 2025 ஞாயிறு மாலை 6 மணி வரை அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிர்க்கின் மனைவி எரிகா மற்றும் அவரது இரு குழந்தைகளுக்கு டிரம்ப் மற்றும் முன்னாள் முதல் பெண்மணி மெலனியா தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
