காசா மீது தாக்குதல்.. இஸ்ரேல் நடத்திய வேட்டையில் 5 பத்திரிக்கையாளர் உட்பட 29 பேர் பரிதாப பலி!

 
இஸ்ரேல்

காஸாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் ஹமாஸ்க்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும், இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 29 பேர் பலியாகினர். இது குறித்து அறிவித்துள்ள காசா சுகாதாரத்துறை, அவர்களில் 5 பேர் ஊடகவியலாளர்கள் என தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற தாக்குதலில் 100 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல்

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மொத்தம் 38,098 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 87,705 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீன ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web