சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த உதவி இயக்குநர் கைது!

சென்னையில் இளைஞர்களிடம் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த திரைப்பட உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு போதை மாத்திரை எங்கிருந்து கிடைத்தது, திரைத்துறையில் வேறு யாருக்கு எல்லாம் போதை மாத்திரை விற்பனை செய்து வந்துள்ளார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடபழனி சரக உதவி ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு, அசோக் நகர் பகுதியில் இளைஞர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களை குறி வைத்து கும்பல் ஒன்று போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் அசோக் நகரில் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர். இதில், இளைஞர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைசெய்துவந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னணியில் அசோக் நகர், 92வது தெருவில் வசித்து வரும் சினிமா உதவி இயக்குநர் தர்ஷன் (21) இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கே.கே.நகர் போலீசார் அசோக் நகரில் தர்ஷனைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள், 29 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் இருக்கும் கும்பல்குறித்து தர்ஷனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!