1,492 பேர் உயிரிழப்பு... தென்மேற்குப் பருவமழை பேரிடர் பாதிப்பு குறித்து இந்திய வானிலை மையம் தகவல்!

 
கேரள நிலச்சரிவு

நாடு முழுவதும் 2024ம் வருடம் துவங்கியதில் இருந்து இதுவரை தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஏற்பட்ட பேரிடர்கள் காரணமாக 1,492 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருட பருவமழை காலத்தில் 934.8 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. சராசரியாக தென்மேற்குப் பருவமழை காலங்களில் பதிவாகும் மழைப்பொழிவை விட இந்த ஆண்டு 18 சதவீதம் கூடுதலாக பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வயநாடு நிலச்சரிவு : பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

மத்திய இந்தியாவில் வழக்கத்தை விட இந்தாண்டு 19 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாகவும், தென்னிந்திய பகுதிகளில் 14 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும்,  வடமேற்கு இந்தியாவில் 7 சதவீதமும், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இயல்பை விட 14 சதவீதம் குறைவான மழை பதிவாகியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டில் பருவமழை காலத்தில் ஏற்பட்ட பேரிடர்கள் காரணமாக நாடு முழுவதுமாக சேர்த்து 1,492 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மழை தொடர்பான சம்பவங்களால் 895 பேர் பலியாகி உள்ளதாகவும், மழைக்காலங்களில் இடி, மின்னல் தாக்கி 597 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. 

நிலச்சரிவு உத்தரகண்ட்

கேரளத்தில் வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக 397 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அடுத்தப்படியாக அசாமில் 102 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு அசாமில் கடுமையான வெள்ளம் பாதித்திருந்தது. மத்தியப் பிரதேசத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் கனமழை, வெள்ளம் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். இடி, மின்னல் தாக்கியதில் மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் (189) பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசம் (138), பீகார் (61)மற்றும் ஜார்கண்ட் (53) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web