அரசு மருத்துவமனையில் அவலம்... கழிவுநீர் தொட்டியில் பிறந்த குழந்தை!

 
குழந்தை உயிரிழப்பு

அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், காவலும் அதிகளவில் இருப்பதில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.  பல மாவட்டங்களில் அவ்வப்போது தவறான சிகிச்சையினால் ஏற்படுகிற உயிரிழப்புகளுடன், குழந்தைத் திருட்டும் அரசு மருத்துவமனைகளில் நிகழ்வது குறித்த புகார்கள் எழுகின்றன. போலீசார், இத்தகைய புகார்களில் திறம்பட செயல்பட்டு, குழந்தையைக் கடத்துபவர்கள் பிடித்து, குழந்தையை மீட்டிருக்கிறார்கள். இந்நிலையில், திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனையின் பின்புறம் இருக்கும் கழிவு நீர் தொட்டியின் மீது பச்சிளங் குழந்தை ஒன்று இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கழிவு நீர்த் தொட்டியின் மீது குழந்தையை வீசி சென்றவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றும் இளையராஜா என்பவர், தண்ணீர் நிரப்பும் மோட்டார் ஸ்விட்ட்சைப் போடுவதற்காக மாடிக்கு சென்றுள்ளார். அப்போது கீழே மூடப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டியின் மீது ஏதோவொன்று அசைவதை கண்ட அவர், பதற்றத்துடன்  கீழே இறங்கி சென்று கழிவு நீர் தொட்டியின் அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது மூடப்பட்டிருந்த கழிவு நீர் தொட்டியின் மீது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பச்சிளம் குழந்தையை கழிவுநீர் தொட்டி மீது விட்டுச்சென்ற அவலம்

இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீஸார், தவறான உறவில் பிறந்த குழந்தை என்பதால் விட்டுச் சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

 

From around the web