EXCLUSIVE: கரூரில் கெத்து காட்டிய ரெய்டு ஆபீசர்... திமுகவினரை ஓட விட்ட தடகள வீராங்கனை!

 
காயத்ரி

நேற்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி வீடு உட்பட அமைச்சருக்கு சொந்தமான 40 இடங்களில் ஐடி துறையினர் ரெய்டு நடத்தினார்கள். நேற்று இரண்டாவது நாளாக ரெய்டு தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், இன்று மூன்றாவது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ரெய்டு நடவடிக்கை தொடர்கிறது. இதற்கிடையில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறையினரிடம் அத்துமீறி அடாவடித்தனம் செய்து பணி செய்ய விடாமல் தடுத்தார்கள் திமுகவினர். அதிகாரி காயத்ரி, திமுக நிர்வாகி குமார் என்பவரால் தாக்கப்பட்டுள்ளார். 

இதில் நாடு முழுவதும் கவனம் ஈர்த்த அதிகாரி காயத்ரி யார் என்கிற விவரம் தெரிந்ததும், திமுகவினர் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். தடகள வீராங்கனையான காயத்ரி, இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்றவர் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

காயத்ரி

திருச்சி, அரியலூரைப் பூர்வீகமாகக் கொண்ட காயத்ரி, ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த நிலையிலும் விளையாட்டிலும், படிப்பிலும் ஆர்வமுடையவர். 12ம் வகுப்பில் 91 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்த காயத்ரி, 16 வயதினருக்கான தடை தாண்டுதலில் தங்கப்பதக்கம், 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுதலில் தங்கப்பதக்கம், 2008ம் ஆண்டு காமன்வெல்த் இளையோருக்கான போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுதல், மும்முறைத் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கங்கள் என சாதனைப் பட்டியல் நீள்கிறது.

தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டே நடத்தப்பட்டது என்று ஆதாரங்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய அமைச்சகத்தில் புகார் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி, கலக்கத்தில் இருக்கிறது திமுக தரப்பு. இந்த ரெய்டு விவகாரமும், திமுகவினர் அடாவடித்தனம் செய்ததையும் வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் முதல்வர் ரசிக்கவில்லை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். அங்கிருந்தப்படியே திமுகவினருக்கு முதல்வர் தனியே ரெய்டு விட்டிருக்கிறார். இதில், திரிசங்கு நிலையில் சிக்கி கொண்டது கரூர் மேயர் தானாம். 

காயத்ரி

தாக்குதலுக்கு திட்டமிட்ட ஆடியோ வருமானவரித்துறையினரிடம் சிக்கி இருக்கிறது. செல்போன் உரையாடல்களையும் முழுவதுமாக எடுத்து வைத்திருக்கிறார்கள். உதயநிதி டிரஸ்டுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய்களையும் முடக்கி உள்ளனர். இந்த ரெய்டு நடவடிக்கை இதோடு முடியப் போவதில்லை. தேவையில்லாம பிரச்சனையை நாமளே பெருசாக்கிட்டோமோ என்கிற கவலையில் இருக்கிறதாம் செந்தில்பாலாஜி தரப்பு.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web