ஏ.டி.எம் கொள்ளை... பயங்கரமாக பிளான் போட்டு ஆட்டைய போட்ட வடமாநில சிறுவன் கைது!

 
ஏடிஎம் திருடன்

சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலையில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயங்கி வருகிறது. நேற்று மாலையில் பலர் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றனர். அப்போது, ​​பணம் வரவில்லை, வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் மட்டும் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வங்கியில் புகார் அளித்துள்ளனர்.

அப்போது சந்தேகமடைந்த வாலிபர் ஒருவர் போலி சாவி மூலம் ஏடிஎம் இயந்திரத்தை திறந்து பணத்தை எடுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அங்கிருந்த ஒருவர் வடமாநில வாலிபரை கையும் களவுமாக பிடித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்ததும், சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுவன் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிறுவன் ஏடிஎம் இயந்திரத்தின் பணம் வெளியேறும் பகுதியை கார்டு மூலம் தடுத்துள்ளார். இதனால் பொதுமக்கள் எடுக்க வேண்டிய பணம் ஏடிஎம் இயந்திரத்திற்குள் தேங்கியுள்ளது. பொதுமக்கள் வந்து சென்ற பின், சாவி மூலம்  இயந்திரத்தை திறந்து பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய், 10 ஏடிஎம் கார்டுகள், 2 சாவிகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 

From around the web