இளைஞர்களை நிர்வாணப்படுத்தி, சிறுநீர் கழித்து , தாக்குதல்.. தொடரும் சாதீய கொடூரங்கள்...!!

திருநெல்வேலி மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் வசித்து வரும் பட்டியலின இளைஞர்கள் மனோஜ் குமார், மாரியப்பன். நண்பர்கள் இருவரும் அக்டோபர் 30ம் தேதி தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த பக்கமாக கஞ்சா மற்றும் குடிபோதையில் இருந்த கும்பல் ஒன்று வழிமறித்தது . வம்பிழுத்து பேச்சு கொடுத்து நீங்கள் என்ன சாதி என கேட்டது. அவர்கள் இருவரும் பட்டியலின சமூகத்தினர் என தெரிந்ததும் அவர்களை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீது சிறுநீரை கழித்துள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்து இரவு வரை வைத்திருந்து சித்தரவதை செய்தனர். வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர்கள் நடந்த சம்பவம் குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அத்துடன் காவல்துறையில் புகாரும் அளித்தனர்.
இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தியதை அடுத்து தாழையூத்து பகுதியில் வசித்து வரும் கஞ்சா கும்பலில் இருந்த 6 பேரையும் கைது செய்தது. அதன்படி பொன்னுமணி (25), ஆயிரம்(19), நல்லமுத்து (21), ராமர் (22), சிவா (22), லட்சுமணன் (20) 6 பேர் மீதும் வன்கொடுமை , வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!