பாகிஸ்தானில் அட்டூழியம்... சீக்கியர் மீது துப்பாக்கிச்சூடு.. சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

 
சீக்கியர்

பொருளாதாரத்தில் கூடிய விரைவில் இலங்கையை விட படுமோசமான நிலைக்கு செல்லும் அபாயத்தில் இருக்கிறது பாகிஸ்தான். ஏறக்குறைய தீவிரவாத நாடு என்றே பல உலக நாடுகள் முத்திரைக்குத்தி உள்ள நிலையில், பெட்ரோல், அரிசி, பால் என எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறி கிடக்கிறது. இந்தியாவுக்கு எதிராக வளர்த்து விட்ட தீவிரவாதம் இப்போது சொந்த நாட்டிலேயே கொழுந்து விட்டு எரிகிறது. என்ன செய்வது என தெரியாமல் பேதளித்து நிற்கிறது பாகிஸ்தான் அரசு. தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசால் இயலவில்லை. இந்நிலையில், பாகிஸ்தானில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சீக்கியர் ஒருவர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் சமீப காலங்களாக சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் பெஷாவர் நகரில், 15,000க்கும் அதிகமான சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இங்கு சீக்கியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர்.

gun

இந்நிலையில், பெஷாவர் நகரில் உள்ள ரஷித்கர்ஹி பஜாரில் மன்மோகன் சிங் என்ற சீக்கியர் மளிகை கடை நடத்தி வந்தார். கடையை மூடி விட்டு மன்மோகன் சிங் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் அவர் மீது சரமாரி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடினர்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஒரு குழந்தை, வயதான பெற்றோர், ஒரு சகோதரி, ஒரு மாற்று திறனாளி சகோதரர் உள்ளனர்.

Police

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு வசிக்கும் சிறுபான்மையினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் பெஷாவரில், தர்லோக் சிங் என்ற சீக்கியர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web