அதிர்ச்சி... ரஷ்யாவில் தேவாலயம் மீது தாக்குதல்... பாதிரியர் உட்பட 15 பேர் பலி; பலர் படுகாயம்!

 
ரஷ்யா
 

ரஷ்யாவில் மீண்டும் ஊடுருவிய பயங்கரவாதிகள் தேவாலயங்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் பாதிரியார் உட்பட 15 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பிராந்தியமான தாகெஸ்தானில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட சில வழிபாட்டுத் தலங்கள் மற்றும் காவல் நிலையத்தின் மீது அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காவல்துறையினர் மற்றும் ஒரு பாதிரியார் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.


தாகெஸ்தானின் மிகப்பெரிய நகரமான மகச்சலாவிலும், கடலோர நகரமான டெர்பெண்டிலுமாக, ஞாயிறு அன்று ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்களை, ஆளுநர் செர்ஜி மெலிகோவ் என்பவர் பயங்கரவாத தாக்குதல் என்று பேட்டியளித்துள்ளார். இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை வளைத்து, போலீஸார் மேற்கொண்ட பதிலடித் தாக்குதலில் மகச்சலாவில் 4 பேர், டெர்பென்ட்டில் இருவர் என மொத்தம் 6 பயங்கரவாதிகள் கொல்லபட்டனர். 
இறந்தவர்களில் காவல்துறை அதிகாரிகளைத் தவிர, டெர்பெண்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஒரு பாதிரியார் உட்பட பல பொதுமக்களும் அடங்குவர் என மெலிகோவ் கூறினார். "இந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் என்ன நோக்கத்தை பின்பற்றுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்" என்றும் மெலிகோவ் பின்னர் குறிப்பிட்டார். ஆனால் அவர் உக்ரைன் மீதே அதன் ஆதரவிலான பயங்கரவாதிகள் குறித்தோ நேரடியாக எதையும் தெரிவிக்கவில்லை.

ரஷ்யா
மாஸ்கோ இசையரங்கு ஒன்றின் மீது, மார்ச் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ரஷ்யாவின் முக்கிய நகரங்கள் அனைத்துமே பயங்கரவாத தாக்குதள் தொடர்பான முழு எச்சரிக்கையில் இருந்தன. மாஸ்கோ தாக்குதலின் பின்னணியில் உக்ரைனால் பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் இருந்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியது. ஆனால் உக்ரைன் அதனை அடியோடு மறுத்திருந்தது. ஆனால் மாஸ்கோ தாக்குதலுக்கு ’ஐஎஸ்ஐஎஸ் கோரசான்’ அமைப்பு முழுப்பொறுப்பேற்று இருந்தது. மாஸ்கோ தாக்குதலில் 137 பேர் பலியாகி இருந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருந்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!