டாஸ்மாக் கடையில் தகராறு... நடுரோட்டில் ஓட ஓட வெட்டி தாக்குதல்.. 2 பேர் கவலைக்கிடம்!

 
 வெற்றிவேல், சற்குணம்

டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக நடுரோட்டில் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி தாக்குதல் நிகழ்த்தியதில் இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரை சேர்ந்தவர்கள் ரஞ்சித்(19), ஆகாஷ்(29), வெற்றிவேல்(27), சற்குணம்(28). இவர்கள் 5 பேரும் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். கோயம்பேடு மார்க்கெட் வளாகம் வழியாக ஓடிய அவர்கள் சரமாரியாக தாக்கினர்.

அப்போது வெற்றிவேல், சற்குணம் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து ரஞ்சித், ஆகாஷ் ஆகியோரை ஓட ஓட விரட்டி கத்தி, இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். பின்னர் 3 ஆசாமிகளும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் 20க்கும் மேற்பட்ட போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பலத்த காயமடைந்த 2 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த ஆகாஷ் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் பரணிதரன் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், 3 மணி நேரத்தில் வெற்றிவேல், சற்குணம் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 கத்திகள், இரும்பு கம்பியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சண்டை

"ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் வழிப்பறி, கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது கொலைவெறித் தாக்குதல் நடந்து வருகிறது.இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் போலீசார் தடுக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web