வாகனத்தில் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல்.. கொலைவெறி கும்பலுக்கு கை முறிவு... 5 பேர் கைது!

 
கூடுவாஞ்சேரி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த தமிழ்செல்வன் மற்றும் வல்லஞ்சேரி பகுதியை சேர்ந்த செல்வம் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெய்பீம் நகரை சேர்ந்த சதீஷ், லட்ச (எ) லட்சுமணன், குண்டு வினோத் (எ) வினோத்குமார், பிரகாஷ், வினோத்குமார் ஆகிய 5 பேர், சிவன் கோயில் அருகே உள்ள குளம் அருகே நடந்து சென்றபோது, பிரகாஷ் மற்றும் போதையில் இருந்த தமிழ்செல்வனையும், செல்வத்தையும் வழிமறித்து வினோத்குமார் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார்.

சண்டை

மேலும், கத்தி, தடியால் அடித்தும் கல்லை தலையில் வீசியும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழ்செல்வன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இருவரும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி, கொள்ளை, கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு கூடுவாஞ்சேரி போலீஸ் எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் சோதனையில் ஈடுபட்டவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். சதீஷ், குண்டு வினோத் (எ) வினோத்குமார், லக்ஷா (எ) லட்சுமணன் ஆகியோர் போலீசாரை பார்த்ததும் வாகனத்தை அதிவேகமாக திருப்பி, கீழே விழுந்ததில் மூவருக்கும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதையடுத்து, விபத்தில் படுகாயம் அடைந்த குற்றவாளிகளை போலீசார் மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை கைது செய்து 5 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web