ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்க முயற்சி.. முன்னாள் பாஜக நிர்வாகி அதிரடியாக கைது செய்த போலீசார்!

 
ஹரி பிரசாத்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தரணிதரன். இவருக்கு தாராபுரம்-பழனி சாலையில் 35 சென்ட் நிலம் உள்ளது. அந்த இடத்தை தாராபுரத்தைச் சேர்ந்த முன்னாள் பாஜக பிரமுகர் ஹரி பிரசாத் என்பவருக்கு ரூ.2.5 கோடிக்கு விற்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நிலத்தை வாங்க தரணிதரனிடம் ஹரி பிரசாத் ரூ.8.25 லட்சம் கொடுத்ததாகவும், மீதியை தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

மீதமுள்ள தொகையை தராமல், நிலத்தை தன் பெயருக்கு மாற்றி தரும்படி, தரணிதரனை, ஹரி பிரசாத் மிரட்டியதாக தெரிகிறது. மேலும் தரணிதரனை தாராபுரத்தில் இருந்து கோவைக்கு அழைத்து வந்து ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் தங்க வைத்து வீட்டு பத்திரம், கார், ஏடிஎம் கார்டு போன்றவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தரணிதரன் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சதி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கைது

இதையடுத்து தாராபுரத்தை சேர்ந்த ஹரி பிரசாத், கோவையை சேர்ந்த பிரவீன்குமார், பாபு ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில், ஜான்சன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். தாராபுரத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத், கோவையைச் சேர்ந்த பாபு ஆகியோர் பாஜக முன்னாள் நிர்வாகிகள் என்பதும், அனுமன் சேனா அமைப்பின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளராக பிரவீன்குமார் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web