இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி.. பாகிஸ்தானை சேர்ந்தவர் மீது ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூடு!

 
பாகிஸ்தான் நபர்

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மேல் செக்டார் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் அங்கு ஊடுருவ முயன்றார். பலமுறை எச்சரித்தும் அவர் நிற்காததால் பாதுகாப்பு படையினர் 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த நபர் உயிரிழந்தார்.

இதையடுத்து, அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இறந்தவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த நபருக்கு சுமார் 25 வயது இருக்கும் எனவும், அவர் குறித்த தகவல் மற்றும் பெயர் அடையாளம் இதுவரை தெரியவில்லை எனவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இறந்தவரின் பையில் இருந்து சில சிகரெட்டுகள், லைட்டர் மற்றும் இயர்போன் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. மேலும், இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web