பரபரப்பு... 3வது முறையாக டிரம்பை கொல்ல முயற்சி... ! துப்பாக்கியுடன் வந்தவர் கைது!

 
டிரம்ப்
 


அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மூன்றாவது முறையாக கொலை  முயற்சி அரங்கேறியுள்ளது. டிரம்ப்பைக் கொல்ல துப்பாக்கியுடன் வந்தவரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர்களாக ஜனநாயக கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். 

அமெரிக்காவில் கோசெல்லா மாகாணத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக்  கூட்டத்தில் இன்று டிரம்ப் பங்கேற்ற நிலையில் அவர் மீது 3வது முறையாக கொலைமுயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக கடந்த ஜூலை 13ம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப்  மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக சமயோசிதமாக அவர் கீழே குனிந்த நிலையில், காதில் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். அதன் பின்னர் 2வது முறையாக கடந்த செப்டம்பரில் புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரைப் பகுதியில் உள்ள கோல்ப் கிளப்பில் டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த போது, டிரம்ப்பைக் குறிவைத்து அவருக்கு மிக அருகிலேயே நின்றுக் கொண்டிருந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதிலும் டிரம்ப் உயிர் பிழைத்தார். துப்பாக்கியால் சுட்டதாக 58 வயதுடைய நபரை போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது 3வது முறையாக டிரம்ப் மீது கொலைமுயற்சி நடைபெற்றுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் துப்பாக்கியுடன் வந்திருந்த  வெம் மில்லர் எனும் 49 வயதான நபரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!