8 வயது சிறுமியை கடத்தி பலாத்கார முயற்சி.. கூச்சலிட்டதால் கொலை செய்த கொடூரம்.. இளைஞர் வெறிச்செயல்!
திங்கள்கிழமை மாலை டெல்லியில் 8 வயது சிறுமி காணாமல் போனார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, அதனால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்று போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளில் 19 வயது இளைஞர் ஒருவர் சிறுமியை கடத்தி கொலை செய்தது தெரியவந்தது.
சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் இளைஞர், சிறுமியை ஆளில்லாத கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் சிறுமி உதவி கேட்டு தொடர்ந்து கூச்சலிடவே, கொலை செய்ததை அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!